என்றாலே இப்படித்தான் தொடராக
பற்பல ஊகங்களும் வதந்திகளும் பரவுமோ.
இளவரசி டயனா இறந்து பத்து
ஆண்டுகளிற்கு மேலான நிலையிலும் அவரைப்பற்றியும் அவரது மரணம்
பற்றியதுமான செய்திகள் தினம் தினம் பத்திரிக்கைகளை நிறைத்தவண்ணமே
இருக்கின்றது.
இளவரசி டயனாவின் மரணம் ஒரு விபத்து
என்றும் பின்னர் அது திட்டமிட்ட கொலை என்றும் பலவாறான கோணங்களில்
விசாரணைகள் நடைபெற்று வந்தது யாவரும் அறிந்ததே.
அன்று நடந்த விபத்தில் உயிர்
தப்பிய ஒரே டயானாவின் மெயப்பாதுகாவலர் குணமடைந்த நிலையில் அன்று நடந்தது
விபத்து என்றும் டயானாவின் வாகன ஓட்டுனர் மது அருந்தியிருந்தார் என்றும்
மற்றவையாவும் சோடிக்கப்பட்ட கதைகள் என்றும் சாட்சியம் கூறியிருக்கிறார்.
இதே வேளை டயானாவின் காதலன்
டோடியின் தந்தையிடம் இளவரசியின் பாதுகாப்பை அதிகரிக்க தனக்கு மேலதிக
மெய்ப்பாதுகாவல்கள் தேவை என்று தெரிவித்திருந்ததாகவும் அதனை அவர்
நிறைவேற்றத்தவறிவிட்டதாகவும் கூறியிருக்கின்றார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக
தொடர்கின்ற இந்த விசாரணை என்று தான் முடியுமோ?
300
ஆண்டுகள் பழமை
வாய்ந்த சீன மொழியிலான
சொப்பிங் லிஸ்ட்
300
ஆண்டுகள் பழமை வாய்ந்த சீன
மொழியிலான சொப்பிங் லிஸ்ட் ஒன்று
18 ஆம் நூற்றாண்டில்
தயாரிக்கப்பட்டது என்று கருதப்படுகின்ற பூச்சாடி ஒன்றினுள் இருந்து
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யோர்க் நகரத்தில் உள்ள
Fairfax கவுஸ் என்னும் இடத்தில்
18 ஆம் நூற்றாண்டில்
தயாரிக்கப்பட்ட தளபாடங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1762 ல் கட்டப்பட்ட இந்த கவுஸ்
ஆனது அன்னா என்பவருக்கு சீதனமாக கட்டப்பட்டதாகக்கூறப்படுகிறது அந்த
கவுஸ் 25
ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள்
பார்வைக்காக திறந்து விடப்பட்டது.
அந்த கட்டடத்தில் இருந்த
பூச்சாடியினுள்ளேயே இந்த
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த
சொப்பிங் லிஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்டில் அந்த வாசினை
அலங்கரிக்கத்தேவையான பொருட்களும் அவற்றின் விலையும் உள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
கறுப்பு மையிலால் சீன மொழியில்
எழுதப்பட்ட இந்த துண்டு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.