கொசோவோ சுதந்திரப்பிரகடனமும் சிறிலங்காவின்
சங்கடமும்!!

சிறிலங்கா அரசாங்கத்திற்கு உலக ரீதியில் சங்கடத்தை ஏற்படுத்தி விட்ட
இன்னும் ஏற்படுத்தப்போகின்ற கொசோவோ வின் சுதந்திரப்பிரடனமானது
விடுதலை வேண்டி நியாயமான போராட்டத்தினை மேற்கொள்கின்ற மக்களுக்கு
மகிழ்வான விடையம். இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள் இன அடக்கு
ஒடுக்குமுறைகள் அது தொடர்பான கடத்தல்கள், கொலைகள். பாலியல்
சித்திரவதைகள் என்று உலகத்தில் கொடுமைகள் என்று சொல்லப்படுகின்ற
அத்தனையையும் சிறிலாங்கா பேரினவாத அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டு
தினம் தினம் அரங்கேற்றமாகிக்கொண்டிருக்கின்றது இதே வேளையில்த்தான்
இவ்வாறான ஒரு பேரினவாத அடக்குமுறை அரசின் கீழ் படு கேவலமான மனிதஉரிமை
மீறல்களை அனுபவித்த கொசோவோ சுய சுதந்திரப்பிரகடனத்தை அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் சேர்பிய அரசும் சேர்பிய இராணுவமும் செய்து வந்த மனித
உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளை உன்னிப்பாக கவனித்து வந்த உலக
நாடுகள் கொசோவோவிற்கு பச்சைக்கொடுயைக்காட்டி விட்டன.
இரண்டு மில்லியன் மக்களைக்கொண்ட கொசோவோ கடந்த பெப்ரவரி மாதம் 17
ஆம் திகதி சுய சுதந்திரப்பிரகடனத்தை அறிவித்துள்ளது உத்தியோக பூர்வமாக
சேர்பிய நாட்டில் இருந்து பிரிந்து கொசோவோ என்ற ஒரு தனிநாடாக தங்களை
அறிவித்துக்கொண்டனர். இந்த அறிவிப்பிற்கு உடனடியாகவே சேர்பியா கண்டனம்
செலுத்தி கொசோவோவின் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று
அறிவித்திருந்தது அதே போலவே ரஸ்யாவும் சேர்பியாவின் ஒத்துழைப்பின்றி
நடைபெற்ற இந்த சுதந்திரப்பிரகடனம் சட்ட பூர்வமற்றது என்று
அறிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, யோர்மனி,
பிரான்ஸ் போன்ற நாடுகள் கொசோவோவின் சுதந்திரப்பிரகடனத்தை
ஏற்றுக்கொண்டு கொசோவோவிடனான தொடர்பினை மேற்கொள்ள முன்வந்த போதும்
ஐரோப்யி யுனியனில் உள்ள சைப்பிறஸ், ஹிரீஸ், றோமானிய மற்றும் ஸ்பெயின்
போன்ற நாடுகள் கொசோவோவை அங்கிகரிக்கவில்லைக்காரணம் இந்த
அங்கீகரிப்பானது தமது நாடுகளிற்குள் இருக்கும் கிளர்ச்சிக்குழுக்களை
ஊக்குவிப்பதாக அமையும் என்ற அச்சம் என்று தெரிவிக்கப்படுகிறது.