Top Menu
Untitled Document
இளவரசரின் இரகசிய போர்ப்படலம்
 

 

 

மன்னர்கள் பகிரங்கமாக போர் சென்று வெற்றி பெறுவர் அல்லது வீரமரணம் அடைவர் அது தான் அன்று தொட்டு பொதுவாக நிலவி வந்த மரபாகும். பிரித்தானிய இளவரசர் ஹரியின் நிலையோ வேறாகிப்போனது இவர் போருக்கு செல்வது பகைவர்களுக்குத்தெரியவந்தால் அவர் மீதான தாக்குதல் முயற்சி அதிகரிக்கலாம் என்ற அச்சத்தினாலும் அவரைக்கடத்துவதற்கு சதி முயற்சிகள் நடைபெறலாம் என்ற அச்சத்தினாலும் ஹரியின் போர்ப்படலாம் பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சின் ஊடாக பிரித்தானிய ஊடகங்களில் மட்டுமல்ல உலக ஊடகங்களிலும் இடுட்டடிப்புச்செய்யப்பட்டது ஆனால் எந்தச்செய்தியையும் நீண்ட நாளைக்கு மறைத்துவைக்க மூடியாது என்பது போலவே அந்தச்செய்தி சிறிது காலத்தில் வெளியாகிவிட்டது தற்பொழுது வேறு வழியின்றி பிரித்தானிய இளவரசர் ஹரியை ஆப்கானிஸ்தான் முன்னரங்க போர்முனையில் இருந்து திரும்பப்பெறப்போவதாக இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியான மறு நாளே அறிவித்து விட்டன.

இளவரசர் ஹரியின் இராணுவ விடையத்தில் என்ன தான் நடக்கின்றது. கடந்த மே மாதம் 2007 ஆம் ஆண்டு ஈராக் சென்று போர்களத்தில் பணிபுரியப்போவதாக ஆவலுடன் காத்திருந்த இளவரசர் ஹரிக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் தான் இராணுவத்தளபதிகள் முதலில் அனுமதி வழங்கியிருந்தாலும் உளவுத்துறை அறிக்கையின் படி இளவரசர் ஈராக்கில் பணிபுரிவதென்பது அவருக்கு மட்டுமல்ல அவருடன் கூட உள்ள படையினருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்தால் அவரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இதே போன்ற பிரச்சனைகள் எதுவுமே மறுபடி எழக்கூடாது என்பதற்காகவே கடந்த டிசெம்பர் மாதம் ஹரி அப்கானிஸ்தான் சென்ற செய்தியினை அதிகாரிகள் திட்டமிட்டு இருட்டடிப்புச்செய்திருந்தார்கள் துர் அதிஸ்டவசமாக இந்தச்செய்தி வெளியாகிவிட்டதால் இளம் இளவரசரின் இராணுவப்பணி அத்தோடு முடியப்போகின்றது. இது தொடர்பாக இளவரசர் வெளியிட்ட செய்தியில் முன்னரங்க நிலைகளில் விமானக்கட்டுப்பாட்டாளராக பணிபுரியும் அவர் சாதாரன படையாளியைப்போல வாழ்வது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் தனது பாதுகாப்புக்கு எப்போதும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை தான் அறிந்தே இருப்பதாகவும் இந்த அச்சுறுத்தல்கள் எவையும் அரச உறுப்பினர்களிற்கு சாதாரனமானவையே என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது இந்த பணியின் தான் செய்யும் முட்டாள்த்தனமான சிறிய தவறுகள் மற்றும் சாதனைகள் போன்றவற்றை தனது தாயார் டயானா பார்த்து ரசிப்பார் என்றும் தனது செயல்களில் பெருமையும் அடைவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் இளவரசரின் காதலி செல்சி அவரின் பிரிவில் துயருற்றிருந்தவர் இளவரசின் மீள்வருகைச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. போர்ப்பணிகளில் இளவரசர்கள் பங்குபற்றுவது எங்கும் புதிதான செய்தி அல்லவே ஆனால் இளவரசர் போர்ப்பணியில் பங்கு பற்றுவதால் அந்த படையணிக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடுவது தான் துர் அதிஸ்டமாகிவிட்டது.

 


.






 



 
காப்புரிமை©2006 Thayakaparaivaikal.com