Top Menu
 
Untitled Document
 

vanakkam

" இணையில்லா தமிழ் இணையமெங்கும் பரவ வகை செய்வோம்."

எம் வாசல் வந்த வாசகர்களிற்கு வணக்கங்கள்!

இன்றைய கால கட்டத்தில் கணணி பத்திரிகைகள் பல வெளி வந்தாலும் பெண்களிற்காக அவர்களின் எதிர்பார்ப்புக்களிற்கு ஏற்றவாறு வெளிவரும் பத்திரிகைகள் ஒரு சிலவே . அந்த ஒரு சிலவில் ஒரு முயற்சிதான் எமது இந்த முயற்சியும் பல்வேறு தேசங்களில் இருந்தும் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் நாங்கள் எடுத்த முயற்சியின் பலனாய் இந்த தாயகப்பறைவைகள் என்கிற தளம் உருவாக்கம் பெற்றது.

தாயகம் நோக்கிய எங்கள் பயணத்திற்காய் நாங்கள் தெரிவு செய்த பாதையே தாயகப்பறவைகள். சிறகுகள் செதுக்கி வலிமையை வரவழைத்து புதிதாய் ஒரு முயற்சி செய்தோம். இதுதான் எல்லை என்று முற்றுப்புள்ளியிட ஏற்காத இளைய மனங்கள் முடிந்தவரை உயர உயரப்பறக்க முயற்சிக்கிறோம். புதிதாய் ஓர் உலகம் எதற்கு இருக்கும் உலகை செப்பனிடுவோம் செழுமைப்படுத்துவோம். நான் நீ என சுயநலமாய் மாறிவிட்ட உலக நாகரீகத்தில் உங்களுடன் நாமாய் இணைந்துள்ளோம்.

இணைய உலகம் ஒரு சமுத்திரம் அதில் சிறு துளியாய் இணைகிறது எங்கள் தாயகப்பறவைகள். எங்கெங்கோ வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பறவைக்கூட்டம் தாயகப்பறவைகள். கனவுகளைய்க் களைந்து கற்பனைகள் கலைத்து நியம் தேடும் எங்களோடு கூட பயணிக்கவும் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவும். இளைய முதிய எழுத்தாளப்பெருமக்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம்.

எங்கள் தேடலை நோக்கிய பயணத்தில் பங்கேற்கும் வாசகப்பெருமக்கள். அறிந்து செய்யும் நல்லவற்றால் பயனுற்று அறியாமல் விடும் பிழைகளைப் பொறுத்துக்கொண்டு தாயகப்பறவைகளோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம்.. இந்த தளத்தின் பெயரிற்கு ஏற்றதை போல எமது பணிகளும் தாயகத்தினை நோக்கிற பறப்பாய் இருக்குமென்று கூறிக் கொண்டு எங்கள் இந்த முயற்சியை இகழ்ச்சியடையாமல் பாதுகாப்பாய் எங்கள் பறப்பைத் தொடர உங்கள் ஆதரவையும் ஆக்கங்களையும் அன்போடு வேண்டி நிற்கிறோம்!!!

நன்றி
தாயகப்பறவைகள்
தொடர்புகளுக்கு

 

 

காப்புரிமை©2006 Thayakaparaivaikal.com